Sunday, August 2, 2009

ஒரு மழைகால இரவுப் பொழுது...




குளுமையான காற்று அதன் ஈரப்பதத்தால் ஒரு மெல்லிய மயக்கம்
நானும் என் ஜன்னல் ஓர மரங்களும் அதன் ரசிகனாய்
இமைகள் மூடி மனதின் அடியில் ஓடும் சிந்தனைகளை
எழுதுகோலின் நுனியில் இழுக்க முயற்சிக்கிறேன் முடியவில்லை

எதாவது எழுத தோன்றுகிறது என்ன எழுத எதைப் பற்றி எழுத ?????
மிக நீண்ட மௌன இடைவேளைக்குப்பிறகு வான்மீது இருத்த பார்வை
சுற்றம் மீது திரும்பியது ஒரு வாகன சத்தம் அலுவலக அலுவல்
முடித்து வீடு திரும்பிய என் சுற்றத்தார்.

வழக்கம்போல் இன்றும் வெகு நேரமாக தட்டியும் திறக்கப்படாத
பக்கத்துக்கு வீட்டு கதவு இன்றும் அதே கெட்டவார்த்தை
உமிழப்படுகிறது. குளிர்த இரவை மதுவுடன் கழிக்க நண்பர்குழு மொட்டை மாடி யேரும் சத்தம். நான் மட்டும் காற்றின் ஈரப்பத மயக்கத்தில்

தூரத்து ஜன்னல் ஒன்றில் ஒரு தாய் இரவு உணவு வேலை
முடித்து சமையல் அரை சுத்தம் செய்கிறாள்.
வழக்கமாக நடப்பவை தான் ஏனோ
இன்று மட்டும் எனக்கு புதிதாக

திடீரென தூரத்தில் பளிச் வெளிச்சம் அழகாய் கோடுகள் கிழித்து விட்டு
வானுள் மறைத்து கொள்கிறது மின்னல்.
மீண்டும் ஒரு நிசப்த அமைதி படர்கிறது
காற்றின் வேகம் சற்று அதிகமாக அதிகமாக மெல்ல இமை மூடுகிறது
எழுதுகோல் என் விரல் விட்டு விடைபெறும் நேரம்
மனம் களிவுற்ற ஒரு மழைகால இரவுப் பொழுது.......

முஹம்மது அனஸ்