இது என்னுள் பல முறை தோன்றி மறைத்த கேள்விகள் சில நேரங்களில் மின்னலாய் பளிச்சிட்டு மறையும் சில நேரங்களில் இடியாய் அதிர்வதையும் உணர்கிறேன். இப்படிபட்ட தருணக்களில் தான் நான் பல முறை நனைக்கப்படுகிறேன். இனி இதன் ஈரம் உலர்வதுமில்லை உலரப்போவதுமில்லை.
இதில் உள்ள எல்லாம் நான் கவிதை என்று சொல்லபோவதில்லை ஒரு சங்கீத வித்துவான் தன் கண்முன்னே நடக்கும் கற்பழிப்பை காண நேரும் போது கத்தாமல் இருக்க முடியாது அந்த கத்தலில் சங்கீததின் இலக்கணத்தை எதிர்பார்க்கமுடியது.
இந்த படைப்பில் பொரும்பான்மை அத்தகைய கத்தல்தான்.
காணுதற்கரியோன்
விரிக்கப்பட்ட இந்த பிரபஞ்சம் இதில்
விதைக்கப்பட்ட நாம். காரணமின்றி
ஏதுமில்லா இவ்வுலகில் இந்த பகுத்தறிவீனம்
மட்டும் எப்படி தான்தோன்றிகளாக
வாழ்திடும்?
சிந்தித்ததுண்டா ஏன்? எதற்காக? இந்த பயணம்
எதில் இதன் முடிவு?
"நெருப்பில்லா புகையில்லை"
என்ற சிந்தனை சில நேரங்களில்.
ஏன்? இத்தனை கதாபாத்திரங்கள்
சில காலம் மழலையாய்
சில காலம் பாலகனாய்
சில காலம் பருவனாய்
சில காலம் பெற்றவனாய்
முடிவில் முதிவுடன் முடிகிறது
இந்த நாடக அரங்கேற்றம்.
யாதும் ஊர் தான் யாவரும் கேளிர்(கிளையினர்) தான்
ஒன்றே குலம் தான் ஒருவனே தேவன் தான்
இது யாருக்கு இங்கு உரைக்கிறது
ஒரு மாபெரும் வாழ்வியலுக்கான
தேடலின் முடிவு இதில் இருக்கிறதேன்று.
படைப்புகள் (நீ, நான், நாம், இந்த பிரபஞ்சம்)
உண்மையென்றால் படைத்தவனும் உண்மையே.
படைப்புகள் படைத்தவனை அறிந்திட முடியா
அதற்கான நேரம் வரை.
இதோ உன் பயணம் முடிந்து உனக்கான ஊதியம்
கணக்கிடப்படும் நாள் வெகு தூரம்மில்லை
திறக்கட்டும் உனக்கான தேடலின் கதவு.
ஒன்று மட்டும் நிச்சயம் படைத்தவன் தன்னை
ஒருபோதும் படைப்புகளாக காட்டிக்கொண்டதில்லை
உறுதியாக மனிதனாக இல்லை என்றும் அவன்
காணுதற்கரியோன்.
முஹம்மது அனஸ்