அரும்புதல் எப்போதும் அழகானது
பூக்களின் மென்மையில்
பூரிக்காதவர்கள் இருப்பது கடினம்…
மனிதனின் பிறப்பும்
மலரின் அரும்புதல் போல்தான்…
ஆனால்
மழலையாய் இருக்கும்போது மட்டுமே
மென்மையாய் இருக்கின்றோம்.
வளர்ச்சியின் வேகத்தில்
மென்மையை இழக்கின்றோமா?!…
மறக்கின்றோமா?!…
எதுவோ ஒன்று…
ஆனால்
நாம் இறுகிப்போகின்றோம்..
காலவெள்ளத்தில் சிக்கிய
கல்லாக இறுகிப்போகின்றோம்…
காற்றின்
வேகத்தில் சிக்கி தவிக்கும்
இலைகளாக கிழிபடுகின்றோம்…
போதும் போலி புன்னகை முகமூடி
கிழித் தேறிவொம்.
கபடம் மில்லா மழலை
அகம் கொள்வோம்...